May 9, 2011
Jan 15, 2011
முகவரி
எனது முகவரி
நீ ....
என்னிடம் பேசிய
முதல் வரி..
இன்று ...
தொலைந்து விட்ட
முகங்களுடனும்
தவறவிட்ட
முகவரிகளுடனும்
தொலையா உன் ....
நினைவுகளுடனும்
காத்து இருக்கிறேன்...
எனது முடிவின் ....
முகவரிக்காய்..
by : Mirun
என்னவள் இல்லாமல்..!!
என்னை..
சுற்றி வரும்
நிமிடங்களை கேட்டேன் ..,
உங்களால் மட்டும்
எப்படி முடிகிறது..!
என்னவள் இல்லாமல்
ஓடிச்செல்ல..
by : Mirun
Jan 4, 2011
உடைந்து போன இரவு
உடைந்து போன.. என்
இரவுகளைக் கேட்டால்
உனக்காக...
நான் எழுதிய கவிதைகள் சொல்லும்.. இன்று...
நான் எழுதி முடித்த...
என் கவிதைகளை கேட்டுப்பார்
நான் எழுதிய கவிதைகள் சொல்லும்..
நான் எழுதி முடித்த...
என் கவிதைகளை கேட்டுப்பார்
உடைந்து போன...
என்
இதயத்தை தான் காட்டும்
Dec 31, 2010
கவிதைகள்
உனக்காக எழுதப்பட்ட கவிதைகள்
மறைக்கப்பட்டிருக்கின்றன..
நீ பார்க்க கூடாது என்பதற்காக இல்லை..
என் கவிதைகளை நீ
நிராகரிக்க கூடாது என்பதற்காக.
Dec 30, 2010
Dec 26, 2010
தேடல்
உலகை மறந்து நான் உறங்கினாலும்
உன்னை மறக்க என்னால் முடியவில்லை..
தூக்கத்தை தொலைத்து
துக்கத்தை சேர்த்துக்கொண்டேன்..தொலைந்து போன என் வாழ்க்கையை தேடி அழைக்கின்றேன்...
அது தொலைவானமாய் போய்கொண்டே இருக்கிறது...நான் வந்த பாதையில் பூத்திருந்த பூக்களெல்லாம்
கருகிக் காடாய் போய்விட்டது.
தொலைந்து போன எனது வாழ்க்கைகிடைக்க வில்லை என்றாலும் பறவாயில்லை.. காதலின் கடலில் விழுந்த
நான்
இனியேனும் கிடைப்பேனா..?என்
தேடல் தொடர்கிறது..
Dec 25, 2010
தற்கொலை
காதலுடன்
இறந்து போன காதலரின் உடல்கள்
இமைகளில்
மட்டும் வழியும் கண்ணீர்.
இவை
பல உறவுகள் இருந்தும் நம் காதலுக்கு கைகொடுக்க வில்லை
என்ற கவலையில் வந்த கண்ணீரா..
இல்லை..
ஆதரவற்ற உறவுகளிடம் இருந்து விடுதலையாகி
இறப்பிலே சேர்ந்ததால் வந்த கண்ணீரா....
Dec 24, 2010
அழகிய ஆபத்து
அழகே ஆண்டவன் படைப்பின் அறிவை மழுங்க வைக்கும்
ஆபத்தான ஆயுதம் நீ..
மனித உணர்ச்சிகளை
மரணப்படுக்கையிலும்..
கொடுக்க உருவான நரம்பு நீ...
கவிதை எழதிய எனது எழுதுகோலை
ஓவியம் வரைய வைத்த
வித்தியாசமாதன பெண் நீ..
ஒரு கண்ணில் தீயும் மறு கண்ணில்
காமம் இரண்டையும்
ஆண்மனதில் நட்டு தெரியாமல் போகும்
புரியாத புதிர் நீ..
பெண்ணே ஏன் இந்த விளையாட்டு ?
நிறுத்திவிடு
இல்லையேல்
உலகில் கவிஞர்கள் மட்டும் வாழ்வார்கள்
இல்லை
சிறைச்சாலைகள் பல உருவாகும்..
posted by:MiruN
வார்த்தை வலிகள்
என்னுள் படர்ந்த - உனது
வார்த்தைகள் ஆயிரம்
ஊசிகளை - என்
இதயத்துள் இறக்குகின்றன...
எனக்கு வாழ்க்கை
கற்றுத்தந்த வலிகளை விட
கற்றுத்தந்த வலிகளை விட
கொடுமையானது
உனது வார்த்தைகள்..அதனால் தான் என்னமோ..
உனது வார்த்தைகள்..
எனக்கு ....
அந்த வலிகள் கூட
பெரிதாக தெரியவில்லை
mirun
Dec 23, 2010
உன்னைக்காணாமல்......
முதலில்
உன் கைபட்டு மலர்ந்த
ரோஜாப்பூவெல்லாம்..
இன்று
மெதுவாக வாடுகின்றன..
என்னைப்போல்
அதனால் எத்தனை
நேரம் தான் உனக்காக
காத்திருக்க முடியும்......
Dec 22, 2010
பெண்ணே!
நீ சாலையோரம் நடந்து போகையில்உன் கை பட்டுபூத்த பூக்களைப் போலஉன் விழி பட்டுஎன் இதயப் பூவையும் மலர வைத்தாய்எனக்கே தெரியாத அதிசயங்களை எனக்குள்ளே நடக்க வைத்தாய்எனது கிறுக்கல் எல்லாம் கவிதையானதுஎனது பேச்சுக்கள் எல்லாம்பேச்சு இழந்து போனதுஒவ்வொரு நொடிகளும்உன்னை பார்க்க அடம் பிடிக்கையில்உன்னை காதல் கொள்ளாமல் இருக்க நான் மட்டும் விதிவிலக்கா?
மன்னித்துவிடு தோழியே ....
தோழியே...- நீ என் அருகில் இருக்கையில்...நான் படும் காயமெல்லாம் தானாய் ஆறிவிடும்..என் காயங்கள் எல்லாம் மாயமாகிவிடும் -ஆயினும் ..உன் இதயம் காயம் கொண்டு உன் கண்ணில் கண்ணீர் கண்டால்...!என்னை மன்னித்துவிடு தோழியே ..கண்ணீர் காணும் முன்னால் உன் காயத்தை என்னால் ..ஆற்ற முடியவில்லையே என்று..!
Subscribe to:
Posts (Atom)















